"பாத்ரூமில் வழுக்கி விழுந்த 2 ரவுடிகள்" - "மாவு கட்டுகளின்றி ரவுடிகள் சிறையில் நடமாட்டம்" : போலீசார் கூறியது பொய்யா என சந்தேகம்
பதிவு : ஆகஸ்ட் 19, 2019, 03:54 PM
பாத்ரூமில் வழுக்கி விழுந்து 2 ரவுடிகளின் கை உடைந்து விட்டதாக போலீசார் கூறிய நிலையில், இருவரும் கையில் மாவு கட்டுகள் எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிதம்பரத்தில் பைனான்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறி பிரபல ரவுடிகள் சுரேந்தர் மற்றும் சுபாஷ் உள்ளிட்ட 4 பேரை   அண்ணாமலை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர்களை செய்தியாளர்களிடம் காட்டும் போது ரவுடிகள் சுரேந்தர் மற்றும் சுபாஷின் கைகளில் மாவு கட்டு காணப்பட்டது. இருவரும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு ரவுடிகளின் கைகளில் மாவு கட்டு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. கை உடைந்த சுவடே இல்லாமல் அவர்கள் நடமாடி வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சமீப காலமாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்ட பின், சிலரது கைகள் உடைந்து மாவு கட்டு போட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும். அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். அது போல் நடந்த இந்த சம்பவம் தற்போது பொய் என வெட்ட வெளிச்சமாகியுள்ளது. உயர் அதிகாரிகளை திருப்திபடுத்த போலீசார் மாவு கட்டு நாடகம் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1692 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5309 views

பிற செய்திகள்

திண்டுக்கல் முத்தாலம்மன் கோவில் திருவிழா : போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்

திண்டுக்கல் மாவட்டம் கூ.குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

12 views

"கல்வி கட்டணம் உயர்த்த வாய்ப்பில்லை" - அண்ணா பல்கலை. துணை வேந்தர் உறுதி

அண்ணா பல்கலைகழகத்தில் கல்வி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அதன் துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.

16 views

செப். 1 - ல் வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, வருகிற 1 ம் தேதி துவங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

26 views

உள்ளாட்சிகளில் எளிதாகும் கட்டிட அனுமதிகள் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

உள்ளாட்சி அமைப்புகளில் வீடுகள் கட்டுவதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்படும் என்றும், கள ஆய்வின்றி இணையதளம் மூலம் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியுள்ளார்.

34 views

கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

கோவை நகரில் உக்கடம் , குனியமுத்தூர் உட்பட 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

14 views

தாளவாடியில் வீட்டுக்குள் நுழைந்த 6 அடி நீள பாம்பு - பாம்பை லாவகமாக பிடித்து வெளியேற்றிய விவசாயி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை விவசாயி சங்கர் லாவகமாக பிடித்து வெளியேற்றி அசத்தினார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.