"பின்னடைவை சந்தித்த வாகன உற்பத்தி துறை" - 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் : ராமதாஸ்

வாகன உற்பத்தி துறை மிகவும் பின்னடைவை சந்தித்து உள்ளதால்,10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பின்னடைவை சந்தித்த வாகன உற்பத்தி துறை - 10 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் : ராமதாஸ்
x
வாகன உற்பத்தி துறை மிகவும் பின்னடைவை சந்தித்து உள்ளதால்,10 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறுகுறு நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளர். எனவே, மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைத்து, அதிக அளவில் வாங்கச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். சலுகைகளை அறிவித்து ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், அன்னிய செலாவணியை ஈட்டவும், ஊக்குவிப்பு சலுகைகள் தான் பொருளாதார மேம்பாடுக்கு உடனடித் தேவை என்ற அவர், இதற்கு, மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்