மேட்டூர் அணை திறப்பு - தமிழக அரசு வேண்டுகோள்
பதிவு : ஆகஸ்ட் 14, 2019, 08:04 AM
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு, அறிவுரைகள் வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சுமார் 2 புள்ளி 25 லட்சம் கன அடியாக உயரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோர மக்களுக்கு எவ்வித அசம்பாவிதங்களும்  ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் அறிவுறுத்தியுள்ளார். இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் நாகை உள்ளிட்ட 12  மாவட்டங்கள் உள்ளடங்கும். இந்த மாவட்டங்களில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காவிரி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என்றும் ஆற்றின் அருகே  செல்ஃபி, புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கால்வாய்களில் ஏற்படும் உடைப்பு மற்றும் பாலத்தின் அடியில் ஏற்படும் அடைப்புகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

கரையோர பகுதியில் இருக்கும் மின்கம்பங்களை பாதுகாக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு சுத்தமான குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் கண்காணிக்குமாறும் நீர்நிலைகளை கடக்கும் கால்நடைகளை பாதுகாப்பதில் கவனம் தேவை எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வதந்திகளால் பொதுமக்களிடையே  எவ்வித அச்சமும் ஏற்படாதிருக்க மாவட்ட ஆட்சியர்கள் உரிய கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2187 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

10008 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5187 views

பிற செய்திகள்

ரூ.100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

10 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

852 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தூய்மை பணி மேற்கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

9 views

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் - மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்

2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நிச்சயம் போட்டியிடுவார் என்று மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் கூறியுள்ளார்,

90 views

நெருக்கடி நிலையை எதிர்த்தவர் கருணாநிதி - திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு

நெருக்கடி நிலையை தைரியமாக எதிர்த்தவர் கருணாநிதி என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.