காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நிறைவு : மேட்டூரில் நீர் திறக்கப்பட்டதற்கு ஒழுங்காற்று குழு மகிழ்ச்சி

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதற்கு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நிறைவு : மேட்டூரில் நீர் திறக்கப்பட்டதற்கு ஒழுங்காற்று குழு மகிழ்ச்சி
x
புதுடெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 14-வது கூட்டம், அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நவீன்குமார், காவிரியின் மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் ஆகஸ்ட் 12 வரை,  வழக்கத்தைவிட கூடுதலான மழைப்பொழிவு இருந்ததாகவும், ஆனால் கீழ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லை என்றும் தெரிவித்தார். இதனை ஒழுங்காற்று குழு பதிவு செய்துகொண்டதாக தெரிவித்த நவீன் குமார், பிலிகுண்டுலுவில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு கிட்டத்தட்ட வழக்கத்தை நெருங்கியுள்ளதாக கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரி பாசனத்திற்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மகிழ்ச்சியை தெரிவித்து கொள்வதாக கூறிய அவர், காவிரி நீர் தொடர்பான அடுத்த கூட்டத்தை செப்டம்பர் 2-வது வாரத்தில் நடத்த முடிவுசெய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்