பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பணியில் 'பிங்க்' நிற ரோந்து வாகனங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பிங்க் நிற ரோந்து வாகன திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பணியில் பிங்க்  நிற ரோந்து வாகனங்கள்
x
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பிங்க் நிற ரோந்து வாகன திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு, மாவட்டந்தோறும் சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காவல் நிலையங்களுக்கு என, பிரத்யேகமாக பிங்க் நிற ரோந்து வாகனத்தை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது. முதற்கட்டமாக,  சென்னையில் உள்ள  சிறப்பு காவல் நிலையங்களுக்கு வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி, விரைவில் முதலைமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள்  வெளிவந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்