"நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு" - கனிமொழி

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
x
நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த கனிமொழி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தூத்துக்குடியில் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு அங்கு நடக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசுகையில், மத்திய அரசு இங்குள்ள நிலையை புரிந்துகொண்டு மாற்றத்தை கொண்டு வருவார்கள் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்