மது பிரியர்களிடம் வசூலித்த அபராத தொகை வைத்து ஏரியை தூர்வாரும் கிராமம்

தஞ்சை அருகே, மது பிரியர்களிடம் வசூலித்த அபராத தொகை உள்ளிட்ட நிதிகளின் மூலம், ஏரியை தூர்வாரும் கிராம மக்களின் முன்மாதிரி செயல் பலரது பாராட்டையும் குவித்து வருகிறது.
x
ஒரத்தநாடு அடுத்த குலமங்கலத்தில் கிராம நலச் சங்கத்தை ஆரம்பித்த இளைஞர்கள் மற்றும் பஞ்சாயத்தார், மதுகுடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதை தடுக்க அபராதம் விதித்தனர். குறைந்த பட்சம் 5 ஆயிரம் ரூபாய் வசூலித்ததன் மூலம் கிராமத்துக்குள் மது குடிப்போரின் எண்ணிக்கை குறைந்தனர். பணமும் வசூலானது. இந்த வெற்றியை தொடர்ந்து,  300 ஏக்கர் பரப்பிலான சடையன் ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்த 40 ஏக்கரை மீட்டனர். மழை நீரை சேமிக்கும் விதமாக ஏரியை தூர்வாரி வருகின்றனர். அரசை எதிர்பார்க்காத கிராம மக்கள், மது குடிப்போருக்கான அபராதம், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடு வாழ் நண்பர்களிடம் பெற்ற உதவி, கிராமத்தில் வசூல் என 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் நிதியை திரட்டி, ஏரியை தூர்வாரி வருகின்றனர். இந்தப் பணியில், இளைஞர்கள் பங்கேற்றுள்ளது சுற்றுப் பகுதியினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்