அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு : 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு

திருப்பூர் அமராவதி அணையில் இருந்து, பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலம் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு : 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு
x
திருப்பூர் அமராவதி அணையில் இருந்து, பிரதான கால்வாய் வழியாக புதிய ஆயக்கட்டு பாசன நிலம் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தென்மேற்கு பருவ மழையால் அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால், அணையின் நீர் மட்டம் வெகுவாக உயரந்து வருகிறது. இன்னிலையில் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் உத்தரவின் பேரில் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. 570 மில்லியன் கன அடி வீதம் 15 நாட்களுக்கு திறக்கப்படும் இந்த தண்ணீரால், 25000 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இதனால் விவசாய மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  



Next Story

மேலும் செய்திகள்