நீலகிரியில் கனமழைக்கு பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

நீலகிரி கனமழை வெள்ளம், மற்றும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
x
நீலகிரி  கனமழை, வெள்ளம், மற்றும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் மீட்பு பணிகளில் 66 ராணுவ வீரர்கள் உள்பட மொத்தம் 491 நபர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 704 பேர் 28 பேரிடர் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நிலச்சரிவு, இடிபாடுகளை சீர் செய்ய 29 ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மழைக்கால நோய்களை தடுக்க 23 நிரந்தரம் மற்றும் 13 நடமாடும் மருத்துவக்குழுக்கள், அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.நீலகிரி மாவட்டத்திற்கு சென்று நிவாரணப்பணிகளை, துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கூடுதல் தலைமை செயலாளர் சத்ய கோபால் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் நீலகிரியில் மழை வெள்ளம், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்