வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணியின் போது 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் : நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடக்கம்
x
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்றும், ஆயிரத்து 73 மாநில போலீசாருடன் ஒரு கம்பெனி துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறினார். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று தெரிவித்த சத்யபிரத சாகு, தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும் என்றும், சட்டமன்ற தொகுதிக்கு 5 ஒப்புகை சீட்டு எந்திரம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியில் எண்ணப்படும் என்றும் தெரிவித்தார். இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையத்துடன் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும்  வீடியோ கான்பிரன்ஸ் மூலமான  ஆலோசனையில்,  வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்