240 கிலோ மீட்டர் 3 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்

வாட்ஸ்-ஆப் குழு மூலம் இணைந்த ஓட்டுநர்களின் கூட்டு முயற்சியால், ஒர் குழந்தை காப்பாற்றப்பட்டது.
x
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ஆனந்தசாமி, ஆர்த்தி தம்பதியினர், தேனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில், குழந்தையை கோவைக்கு கொண்டு செல்ல, வாட்ஸ்-ஆப் குழு மூலம் ஓட்டுநர்கள் ஒன்றிணைந்தனர். இதன் படி சதீஸ்குமார் என்பவர் குழந்தையை காப்பாற்ற முன்வந்தார். ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்பே விரைந்து சென்று, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து கொண்டே, மற்றவர்கள் சென்றனர். வழியில் உள்ள ஓட்டுனர்களும், 
போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவினர்.  இந்த உதவியால் சுமார் 240 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 2 மணி நேரம் 55 நிமிடத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். குழந்தையின் உயிரை காப்பாற்ற அரும்பாடு பட்ட ஓட்டுநர்களுக்கு, பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்க, மருத்துவர்களும் பாராட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்