பேரிடர் தொடர்பான கண்காட்சி தொடக்கம் : ஏராளமான மாணவ மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளிப்பு

சென்னை தீவுத்திடலில், தமிழக அரசின் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 'பேரிடர் கண்காட்சி' தொடங்கி உள்ளது.
பேரிடர் தொடர்பான கண்காட்சி தொடக்கம் : ஏராளமான மாணவ மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளிப்பு
x
சென்னை தீவுத் திடலில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 23 அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால் துவக்கி வைத்தார். நாளை வரை நடைபெறும், இந்த கண்காட்சியில் நாட்டின் முப்படைகள், தேசிய மற்றும் தமிழக பேரிடர் மீட்பு படைகள், சென்னை விமான நிலைய தீயணைப்பு துறை, எம்.ஐ.டி. நிர்வாகம்,சென்னை மாநகராட்சி,108 மருத்துவ சேவை உள்ளிட்ட பல துறைகள் சார்பாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை விமான நிலையம் சார்பாக அதி நவீன ராட்சத தீயணைப்பு வாகனங்கள், ஆளில்லாத விமான செயல்பாடுகள்  இடம்பெற்றுள்ளன. இதை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். சென்னை விமான நிலையத்திற்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தீயணைப்பு வாகனத்தின் செயல்பாடு அனைவரையும் வியக்க வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்