ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மறுதினம் தேரோட்டம் : முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை மறுதினம் தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி, அங்கு நடைபெற்று வரும் பணிகளை விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் நேரில் ஆய்வு செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை மறுதினம் தேரோட்டம் : முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை மறுதினம் தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி,  அங்கு நடைபெற்று வரும் பணிகளை விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் நேரில் ஆய்வு செய்தார். தேரின் தன்மை குறித்தும், தேர் செல்லும் 4 ரத வீதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சிவஞானம், பின்னர் செய்​தியாளர்களிடம் பேசியபோது,  இந்த வருடம் தேரை நிறுத்த, தேரின் 4  பெரிய சக்கரங்களிலும் நவீன ஹைட்ராலிக் ஏர்பிரேக் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  பாதுாகப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்