திமுக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழகத்தில் கண்டிப்பாக தி.மு.க. ஆட்சிக்கு வரும், அப்போது நாடாளுமன்ற தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திமுக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
தமிழகத்தில் கண்டிப்பாக, தி.மு.க. ஆட்சிக்கு வரும், அப்போது நாடாளுமன்ற தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து சித்தூர் கேட் பகுதியில்  திறந்த வேனில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது உள்பட அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திமுக மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி - திமுக தலைவர் ஸ்டாலின்

வேலூர் தேர்தலை நிறுத்தி திமுக மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்ததாக  திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திறந்த வேனில் வாக்கு சேகரித்த அவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்