12 - வது வகுப்பு ஆங்கில பாடத்தில் தமிழ் மொழி குறித்து சர்ச்சை பதிவு - ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

பிளஸ்- டூ ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ் 300 ஆண்டுகள் மட்டுமே பழமையான மொழி என பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
12 - வது வகுப்பு ஆங்கில பாடத்தில் தமிழ் மொழி குறித்து சர்ச்சை பதிவு - ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
x
பிளஸ்- டூ ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ்,  300 ஆண்டுகள் மட்டுமே பழமையான மொழி என பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக, தமது டுவிட்டர் வலைப்பதிவில்,  இது தமிழக அரசா, அல்லது சமஸ்கிருத அரசா? என கேள்வி எழுப்பி உள்ளார்.  எப்படி சகிப்பது இந்த கொடுமையை என  தமது டுவிட்டர் பதிவில், மு.க. ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

12- வது வகுப்பு பாடப்புத்தகம் விவகாரம் - தமிழிசை சவுந்திரராஜன் கடும் எதிர்ப்பு

பிளஸ்- டூ ஆங்கில பாட புத்தகத்தில் தமிழ்,  300 ஆண்டுகள் மட்டுமே பழமையான மொழி என பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில்,   தொன்மையுடைய நம் முதுமொழி தமிழ் 300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என பாடப்புத்தகத்தில் அச்சிட்டிருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன், உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும், தவறு நடக்க காரணமாக இருந்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்