சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - பூங்கோதை

நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது கணவர் முருகசங்கரனுடன் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தார்.முருகசங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இந்நிலையில் நேற்று உமாகேஸ்வரி , அவரது கணவர்முருகசங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேரையும் கத்தியால் குத்திவிட்டு  தப்பியோடிவிட்டனர் மூன்று பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர்.தகவல் அறிந்து வந்த மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் அா்ஜுன் சரவணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் மூன்று பேரின் உடல்களையும்  போலீசார் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது வீட்டுமுன்பு திமுகவினர் , பொதுமக்கள் என ஏராளமானவர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - பாஸ்கரன்



இதனிடையே, கொலை சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், ஆதாயத்திற்காக இந்த கொலை நடந்துள்ளதாக கூறினார். இது குறித்து துணை ஆணையர் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.




Next Story

மேலும் செய்திகள்