வேலூர் மக்களவை தேர்தலில் கே.எஸ். அழகிரி சமரச முயற்சி வெற்றி - வேட்புமனுவை வாபஸ் பெற்றார் வாலாஜா அசேன்

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் நிர்வாகி வாலாஜா அசேன் தனது மனுவை கடைசி நிமிடத்தில் வாபஸ் பெற்றார்.
வேலூர் மக்களவை தேர்தலில் கே.எஸ். அழகிரி சமரச முயற்சி வெற்றி - வேட்புமனுவை வாபஸ் பெற்றார் வாலாஜா அசேன்
x
வேலூர் மக்களவை தேர்தலில், திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து, களமிறங்கிய காங்கிரஸ் நிர்வாகி வாலாஜா அசேன், தனது மனுவை கடைசி நிமிடத்தில் வாபஸ் பெற்றார். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் மாலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் சமரசத்தை வாலாஜா அசேன் ஏற்றுக்கொண்டார். எனவே, வேலூர் மக்களவை தொகுதியில், 25 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட இறுதியாக களத்தில் மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வருகிற 5 ம் தேதி தேர்தல் நடைபெறும் வேலூர் தொகுதியில் திமுக, அதிமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டி உருவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்