இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து

சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர்.
இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதி விபத்து
x
சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர்கள் இருவரும், ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்தும் போலீசார் வர தாம‌தம் ஆனதால், அங்கிருந்த சக வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த இளைஞர்கள் ரமேஷ் ,  சந்தோஷ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரைமணி நேரம் கழித்து போலீசார் வந்த‌தால், அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றான மெரினா கடற்கரை சாலையில் போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடாத‌து ஏன் என கேள்வி எழுப்பிய சக பயணிகள், போலீசாரின் அலட்சியம் காரணம்  என குற்றம்சாட்டினர். 

நின்ற லாரி மீது மோதிய பேருந்துகள் - அடுத்தடுத்து நடந்த கோர விபத்து



நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், 2 பேர்  உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரும்புக் கம்பி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனை அறியாத சென்னையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று , நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. அதனை தொடர்ந்து வந்த தனியார் பேருந்து, அரசு பேருந்தின் பின்பகுதியில் மோதி நின்றது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரியின் கிளீனர் உயிரிழந்தனர். அதிகாலை நேரம் என்பதால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க முடியாமல் மீட்பு படையினர் திணறினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் உதவியுடன் உடல்கள் மீட்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்