அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்

சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் - ஸ்டாலின்
x
அணை பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்தினால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அணை பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அதை அதிமுக எதிர்த்து வருவதாக கூறிய அவர், இதை திரும்ப பெற தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்றும் கூறினார்அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார்.தொடர்ந்து பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஸ்டாலின், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பியதோடு சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சட்டமன்ற நடவடிக்கை நேரலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், சட்டமன்ற நடவடிக்கையில் சரி பாதி காட்சிகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார்.இதேபோல் கஜா புயலின் போது ​விவசாய நிலங்களில்விழுந்த மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதாக திமுக உறுப்பினர் ஆடலரசன் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, புயலில் போது சுமார் 32 ஆயிரம் மின்கம்பங்கள் விழுந்து சேதம் அடைந்ததாகவும், இதில் ஆயிரத்து 500 மின்கம்பங்கள் மட்டுமே அகற்றப்படாமல் உள்ளதாகவும் அவை​ ஒரு மாதத்தில் அகற்றப்படும் என்றும் கூறினார்.தொடர்ந்து தனியார் மருத்துவ நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.இதேபோல் சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்களை 6 லிருந்து 9 ஆக உயர்த்த அனுமதிக்கும் சட்டத் திருத்த மசோதாவும் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையை போக்க, நீர் மேலாண்மை இயக்கம், மக்கள் இயக்கமாக தொடங்கப்படும் என்றார். 110 விதியின் கீழ் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அதேபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, 3 கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், 3 வது முறையாக ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியமைத்து அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்