சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்

வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனையில் வெந்நீர் ஊற்றும் வேலை நடைபெறுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்
x
பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஸ்டாலின், ஒரே நாடு - ஒரே தேர்தல்,  ஒரே நாடு -ஒரே நீட் தேர்வு, ஒரே நாடு -ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு - ஒரே கலாசாரம் என்பது அனைத்து விஷயங்களிலும் பரவி வருவதாக தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் நிலை என்ன எனவும்,  விதி110 ன் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளதாகவும் அவர் கூறினார். வீட்டுவசதி துறையின் சார்பில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனவும் அவர் வலியுறுத்தினார்.இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சட்டமன்ற நடவடிக்கை நேரலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், சட்டமன்ற நடவடிக்கையில் சரி பாதி காட்சிகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்