உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் வரை நீட்டிக்கும் மசோதா - சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை வரும் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.
உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் வரை நீட்டிக்கும் மசோதா - சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் வேலுமணி
x
தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தோடு முடிந்தது. அதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு காரணமாக தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் வரை, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 30ஆம் தேதியோடு தனி அலுவலர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அதனை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கும் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில், உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான காரணமும், அதை தொடர்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்