உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் விவகாரம் - திமுக எம்பிக்கள் மீது அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு

அவை மரபை மீறும் வகையில் நடந்து கொண்ட திமுக உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு சட்டப்பேரவை தலைவர் தனபால் கண்டனம் தெரிவித்தார்.
உயர்மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கும் விவகாரம் - திமுக எம்பிக்கள் மீது அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
x
சட்டபேரவையில் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உயர் மின்னழுத்த  கோபுரங்கள் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய,  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மதுரையிலிருந்து இலங்கைக்கு உயர்மின் கோபுரங்கள் மூலமாகவே மின்சாரம் கொண்டுசெல்லும் சூழல் இருக்கும் நிலையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சென்று திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்தார். மேலும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேசிவருவதாகவும் குறிப்பிட்டார்.அப்போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி அமைச்சர் தங்கமணியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர் செந்தில்பாலாஜி எழுந்து கூச்சலிட்டார்.அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக அமைச்சர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக உறுப்பினர்கள் திட்டமிட்டே ரகளையை உண்டுபண்ணுவதாக பேசினார்.முடிவாக பேசிய சபாநாயகர் அமைச்சர் விளக்கத்தின் போது அவை மரபை மீறி குறுக்கிட்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் செந்தில்பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்