காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி : தங்கம் வென்ற புதுக்கோட்டை அனுராதா
பதிவு : ஜூலை 19, 2019, 09:13 AM
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அனுராதா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இதில் 87 கிலோ பளுதூக்குதல் பெண்கள் பிரிவில் , ஸ்னாட்ச் பிரிவில் 100 கிலோவும் , கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 121 கிலோவும் என மொத்தம் 221 கிலோ தூக்கி தங்க பதக்கம் வென்றார். விமானம் மூலம் திருச்சி வந்த அனுராதாவிற்கு அவரது பயிற்சியாளர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதேபோல, அனுராதாவின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  தமிழகத்தில் பின்தங்கிய கிராமங்களிலிருந்து வரும் பெண்கள் சாதிப்பது சவாலாகவே உள்ளது என்றும், உலக தரம் வாய்ந்த உபகரணங்கள் வழங்கினால் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்  என்றார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.