காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை : திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை : திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அனுராதா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இதில் 87 கிலோ பளுதூக்குதல் பெண்கள் பிரிவில் , ஸ்னாட்ச் பிரிவில் 100 கிலோவும் , கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 121 கிலோவும் என மொத்தம் 221 கிலோ தூக்கி தங்க பதக்கம் வென்றார். இன்று விமானம் மூலம் திருச்சி வந்த அனுராதாவிற்கு அவரது பயிற்சியாளர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்