வறண்டு போன காமராஜர் நீர்த்தேக்கம் : திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் கிடைக்குமா?

திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர்தேக்கம் வறண்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
வறண்டு போன காமராஜர் நீர்த்தேக்கம் : திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் கிடைக்குமா?
x
திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர்தேக்கம் வறண்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் காமராஜர் நீர்த் தேக்கத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தண்ணீர் வருகிறது. தற்போது கடும் வறட்சியின் காரணமாக ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள  48 வார்டு மக்களுக்கு குடிநீர் ஆதாரமே இந்த ஆத்தூர் குடிநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்