வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - உயர்நீதிமன்றம்

ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் வைகோவுக்கான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.
வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - உயர்நீதிமன்றம்
x
கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.தி.மு.க. பொதுச் செயலாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து வைகோ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, ஓராண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு முடியும் வரை ஏற்கனவே பேசியது போன்று பேசக் கூடாது  என உத்தரவிட்டார். இனிமேல் பேசும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்