"கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா?" - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்

புதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கருத்துக் கேட்பு கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா? - பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன்
x
புதிய கல்வி கொள்கை குறித்த மண்டல அளவிலான கருத்துக் கேட்பு கூட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், தனியறைக்குள் கடும் கெடுபிடிகளுடன் நடத்தப்படுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில், கூட்டம் நடந்த வளாகத்துக்குள் சென்ற அவர், கருத்துக் கேட்பு கூட்டம் ரகசியமாக நடத்தப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார். அடித்தட்டு மக்களுக்கே தெரியாமல், யாருக்காக புதிய கல்விக் கொள்கை கருத்துக்கேட்பு கூட்டம், என்று வாதம் செய்த அவர், மண்டல கருத்துக் கேட்பு கூட்டத்தை, ரகசியமாக நடத்துவது ஏன் என்றார். தனி அறைக்குள் அமர்ந்து அதிகாரிகள் முடிவெடுக்கும் பிரச்சினை இதுவல்ல என்ற ராமகிருஷ்ணன், உடனடியாக மக்களுக்கு அறிவிக்கவும், பள்ளிகளுக்கு சென்று கருத்துக் கேட்கவும் வலியுறுத்தினார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்