சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
x
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சிவசங்கர் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து வரும் ஜூலை 18ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்