புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் - எம்.பி. திருச்சி சிவா

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, கோரியுள்ளார்.
புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் - எம்.பி. திருச்சி சிவா
x
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்து தெரிவிக்கும் கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, கோரியுள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கை 447 பக்கங்கள் கொண்ட மிகப் பெரிய ஆவணமாக இருப்பதால், அதைப் படித்து பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார். அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும், கல்விக் கொள்கை ஆவணத்தை வெளியிட வேண்டும் என்றார். இதே கருத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.  டி.ராஜா பேசினார். இதனிடையே, மத்திய, மாநில அரசின் கீழ் கல்விக் கொள்கை வருவதால், மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தினார்.  

Next Story

மேலும் செய்திகள்