"தனியார் பேருந்துகள் வேகமாக இயங்குவது தடுக்கப்படும்" - கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 'உயிர்' என்ற தனியார் அமைப்பு சார்பில். சட்டையில் பொறுத்திக் கொள்ளும் வகையில் 70 கேமராக்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
x
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 'உயிர்' என்ற தனியார் அமைப்பு சார்பில். சட்டையில் பொறுத்திக் கொள்ளும் வகையில்   70  கேமராக்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனை காவலர்களுக்கு வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  மாநகர காவல் ஆணையர்  சுமித்சரண், முதல் கட்டமாக சட்டையில் பொருத்தக்  கூடிய 70 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் கண்காணிப்பு பணியை மேம்படுத்தவும், வாக்குவாதங்களை தவிர்க்கவும்  முடியும் என்றும், 
சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் 14 ஆயிரத்து 100 வழக்குகள் பதியப்பட்டு அபாரதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். ராபிட்டோ செயலி மூலம் இரு சக்கர வாகனம் வாடகைக்கு இயக்கப்படுவது குறித்து வட்டார  போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கும் என்றும், அதிவேகமாக தனியார் பேருந்துகள் இயக்குவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுமித்சரண் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்