இ-சேவை மைய ஊழியர்களின் சம்பள பற்றாக்குறை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசு பரிசீலனை - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்

சட்டப்பேரவையில் வருவாய் துறை மானிய கோரிக்கை மீது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 900 இ- சேவை மையங்களில், தற்போது 587 இ- சேவை மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.
இ-சேவை மைய ஊழியர்களின் சம்பள பற்றாக்குறை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அரசு பரிசீலனை - அமைச்சர் ஆர். பி. உதயகுமார்
x
சட்டப்பேரவையில் வருவாய் துறை மானிய கோரிக்கை மீது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 900 இ- சேவை மையங்களில், தற்போது 587 இ- சேவை மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறினார். இதற்கு பதிலளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இ-சேவை மையத்தில் பணியாற்று ஊழியர்களின் சம்பள பற்றாக்குறை பிரச்சனைக்கு உரிய தீர்வு காண அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் மணிகண்டன், கடந்த மே, ஜூன் மாதங்களில் பள்ளி முடித்த லட்சக்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் சான்றிதழ் பெற இ சேவை மையங்களை நாடியதால் ஒரு சில இடங்களில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அந்த பிரச்சனைகள் நிவர்த்தி செய்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்