"குழந்தையை கடத்தியதற்கான காரணம் தெரியவில்லை" - முருகன், டி.எஸ்.பி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 3 வயது குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
x
சில தினங்களுக்கு முன் ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ராம்சிங் - நீலாவதி தம்பதியர், 3 வயது மகன் சோம்நாத் உடன் அங்கேயே உறங்கினர். காலையில், கண்விழித்தபோது, தங்களின் 3 வயது மகன் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள், போலீசாரிடம் புகாரளித்தனர். 3 தனிப் படைகள் மூலம் தேடி வந்த நிலையில், குழந்தையுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒருவர் செல்லும் சிசிடிவி காட்சி சிக்கியது. எனினும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, திருப்போருரில் அனாதையாக சுற்றி திரிந்த நிலையில், சிறுவனை மீட்ட இளைஞர் ஒருவர், சைல்டு லைன் மூலம் பரங்கிமலை குழந்தைகள் காப்பகத்தில் நேற்று ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்ட குழந்தை, செங்கல்பட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல குழும அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குழந்தையை கடத்திய ஒடிசாவைச் சேர்ந்த கோபிரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்