உணவு பொருள் அட்டைகளில் கலோரி, சர்க்கரை அளவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்

நோய் தடுப்பு சுகாதார கல்வி குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று பேரவையில் பூங்கோதை ஆலடி அருணா வலியுறுத்தியுள்ளார்.
உணவு பொருள் அட்டைகளில் கலோரி, சர்க்கரை அளவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
நோய் தடுப்பு சுகாதார கல்வி குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று பேரவையில் பூங்கோதை ஆலடி அருணா வலியுறுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மானியகோரிக்கை மீதான விவாத்தில் பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, உணவு பழக்கதாலும் வாழ்க்கை முறையாலும் தொற்று நோய்கள் தொற்றா நோய்களால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். உணவு பொருட்களின் அட்டைகளில் கலோரிகள், சர்க்கரை அளவு போன்ற பல்வேறு அம்சங்கள் வாசகங்களாக இடம் பெறவேண்டும் என்று வலியுறுத்தினார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டால் உங்கள் அறிவுரை அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்