மாங்கனி திருவிழா கோலாகலம் : போட்டி போட்டுக்கொண்டு மாம்பழங்களை பிடித்த பொதுமக்கள்

காரைக்காலில் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மாங்கனி திருவிழா கோலாகலம் : போட்டி போட்டுக்கொண்டு மாம்பழங்களை பிடித்த பொதுமக்கள்
x
63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால்அம்மையார்,  தவமிருந்து இறைவனிடம் மாங்கனி பெற்றதை விளக்கும் வகையில் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவில், சிவபெருமான் பிச்சாண்டவ மூர்த்தியாக பவளக்கால் விமானத்தில் வீதியுலா வந்த போது அவருக்கு மாங்கனிகளை படைத்த பக்தர்கள், அதனை வீதிகளில் இரைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிகொண்டனர். வீடுகளின் மாடிகளில் இருந்து பக்தர்கள் வீசிய மாம்பழங்களை கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பிடித்து பிரசாதமாக எடுத்துச் சென்றனர்.  மாங்கனி திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்படும்  மாம்பழங்கள் உட்கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் திருமணதோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம். 

Next Story

மேலும் செய்திகள்