பூட்டி கிடந்த கட்டிடத்தொழிலாளர் நலவாரிய அலுவலகம் - திறக்க கோரி மூதாட்டி தர்ணா போராட்டம்

ஈரோடு கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த காளியம்மாள் கட்டிட தொழிலாளர் நல வாரியத்தை திறக்க கோரி தர்ணா நடத்தினார்.
பூட்டி கிடந்த கட்டிடத்தொழிலாளர் நலவாரிய அலுவலகம் - திறக்க கோரி மூதாட்டி தர்ணா போராட்டம்
x
ஈரோடு  கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த காளியம்மாள், கட்டிட தொழிலாளர் நல வாரியத்தை திறக்க கோரி தர்ணா நடத்தினார். இவரது கணவர் கிட்டான் கடந்த 2007 ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து அவர் பணிபுரிந்த கட்டிடத்தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் உதவித்தொகை கோரி 60 வயதாகும் காளியம்மாள் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நலவாரிய அலுவலகம் தொடர்ந்து பூட்டியே கிடந்ததையடுத்து, அதை திறக்க கோரி, அதன் முன்பு காளியம்மாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை காளியம்மாள் கைவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்