உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் - ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தல் - ரூ.1.10 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
x
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா   அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த பயணிகளிடம் சோதனையிட்டபோது, உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த, 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. இது தொடர்பாக, அமீது பாதுஷா, மீரா உசேன், இஸ்மாயில் உள்ளிட்ட 11 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்