சென்னையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி- மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை
x
சென்னையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி- மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.  அண்ணாநகர் ,நுங்கம்பாக்கம், எழும்பூர், தரமணி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என இரவு 8 மணிக்கு மேல் சென்னை முழுவதும், கன மழை கொட்டி தீர்த்த‌து. 2 மணி நேரம் நீடித்த இந்த கனமழையால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். கன மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.

கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி



நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்,  நாமகிரிபேட்டை,  பட்டணம் உள்ளிட்ட சுற்றுவட்டார  பகுதிகளில் மாலை நேரத்தில் திடீரென கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விடாது பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்தநிலை நிலவியது.இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை  :



கொடைக்கானலில்  கடந்த ஒருவாரமாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது . இந்நிலையில்,  2 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் அரை மணிநேரம் கன மழை கொட்டித்தீர்த்தது. மழை காரணமாக உருளை, கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.இதமான சூழல் நிலவுவதால், சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.

அரைமணி நேரம் பெய்த மழை - மக்கள் மகிழ்ச்சி :



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அரைமணி நேரம் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்