காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117வது பிறந்தநாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
x
சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜரின் நினைவில்லத்திற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் காமராஜரின் உருவசிலைக்கு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சில்வர் தட்டுகள், புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் லிங்கத்தடி மேடு கிராமத்தில் உள்ள வள்ளலார் கல்வி நிலையம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கல்வித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள  காமராஜரின் சிலைக்கு அதிமுக, திமுக, பாஜக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்