குன்னுார் : வறண்டு போன ரேலியா அணை : குடிநீருக்கு அலையும் பொதுமக்கள்

குன்னுார் நகர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையாக, ரேலியா அணை இருந்து வருகிறது.
குன்னுார் : வறண்டு போன ரேலியா அணை : குடிநீருக்கு அலையும் பொதுமக்கள்
x
குன்னுார் நகரில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையாக, ரேலியா அணை இருந்து வருகிறது. 43 புள்ளி  5 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை, போதிய மழை இல்லாததால் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. தற்போது 10 அடி மட்டுமே தண்ணீர் உள்ளதால், இரண்டு நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்கும் நிலை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் தண்ணீரை தேடி பல கிலோ மீட்டர் நடந்து சென்று நீரோடைகளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஒரு குடம் 15 ரூபாய் எனவும், வாகனங்கள் மூலம் ஆயிரம் லிட்டருக்கு 750 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை குடிநீர் விற்கப்படுகிறது. இதனால் குடிநீருக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து வந்தாலும், ரேலியா அணையில் நீர் மட்டம் உயரவில்லை.

Next Story

மேலும் செய்திகள்