சானமாவு வனப்பகுதியில் 4 காட்டுயானைகள் முகாம் : மூவரை கொன்ற கொம்பன் யானை மீண்டும் வந்தது

ஒசூர் அருகே சானமாவு வனப்பகுயில் முகாமிட்டுள்ள நான்கு காட்டு யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சானமாவு வனப்பகுதியில் 4 காட்டுயானைகள் முகாம் : மூவரை கொன்ற கொம்பன் யானை மீண்டும் வந்தது
x
ஒசூர் அருகே சானமாவு வனப்பகுயில் முகாமிட்டுள்ள நான்கு காட்டு யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக வனப் பகுதியிலிருந்து அடுத்தடுத்து 4 காட்டுயானைகள் சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்தன. இவற்றில், கடந்தாண்டு, ஒசூரில் 3 பேரை தாக்கி கொன்ற கொம்பன் யானை மற்றும் மார்க், சூளகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய யானைகளும் உள்ளன. கதிரேப்பள்ளி, பேரண்டப்பள்ளி, ராமச்சந்திரம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில்  சுற்றித்திரியும் காட்டுயானைகளை, மீண்டும் கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்டியடிக்குமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்