மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு : 3 நாள் கலந்தாய்வில் நிரம்பிய 65% எம்.பி.பி.எஸ். இடங்கள்

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றும் வரும் நிலையில், மூன்று நாள் கலந்தாய்விலேயே, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 3 ஆயிரத்து 968 எம்பிபிஎஸ் இடங்களில், 65 விழுக்காடு இடங்கள் நிரம்பிவிட்டன.
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு : 3 நாள் கலந்தாய்வில் நிரம்பிய 65% எம்.பி.பி.எஸ். இடங்கள்
x
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றும் வரும் நிலையில், மூன்று நாள் கலந்தாய்விலேயே, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள 3 ஆயிரத்து 968 எம்பிபிஎஸ் இடங்களில், 65 விழுக்காடு இடங்கள் நிரம்பிவிட்டன. கடந்த 9ஆம் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. இதில் அரசு மற்றும் அரசின் கீழ் செயல்படும் 26 மருத்துவக்கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு போக, மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ், எம்பிபிஎஸ் படிப்பில் மட்டும் 3968 இடங்கள் உள்ளன. இதில் 2548 இடங்கள் நிரம்பிவிட்டன. இதேபோல், 13 தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 977 இடங்களில், 687 இடங்களும் நிரம்பிவிட்டன. 



Next Story

மேலும் செய்திகள்