தீயில் காட்டினால் அழியும் எழுத்துக்கள் : வெளிச்சத்துக்கு வந்த "மேஜிக் பர்மிட்" மோசடி
பதிவு : ஜூலை 12, 2019, 04:14 PM
வெப்பத்தினால் அழியும் எழுத்துக்களை பயன்படுத்தி பெறப்படும் பர்மிட் மூலம் கல்குவாரிகளில் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட குவாரிகள், அரசு அனுமதியுடன் செயல்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஜல்லி, ரஃப் கல், மேடை மண், சரளை மண், ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு செல்ல, குவாரிகளில் இருந்து தரும், ஒப்புகை சீட்டு அவசியம். இதை அவர்கள், கனிம வளத்துறை அதிகாரிகளிடம், உரிய வரி செலுத்தி, பெற வேண்டும் என்பது கட்டாய நடைமுறை...

ஒப்புகை சீட்டில், குவாரியில் இருந்து கனிமங்கள் கொண்டு செல்லும் நாள், நேரம், ஓட்டுனர் பெயர், உத்தேச தூரம், குவாரி உரிமையாளர் கையொப்பம் ஆகியவை இருக்கும். மேலும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளின் முத்திரை, கையொப்பம், அரசின் ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.  அவ்வாறு பெறப்படும் ஒரு ஒப்புகை சீட்டு ஒரு லோடுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

சம்பந்தபட்ட துறை அதிகாரிகள், சோதனை செய்யும்போது, ஒப்புகை சீட்டை காட்ட வேண்டும். இல்லையேல் லாரியை பறிமுதல் செய்யவும், ஓட்டுனரை கைது செய்யவும், சட்டத்தில் வழிமுறை உள்ளது. இந்த நிலையில், இந்த அனுமதி சீட்டு  பெருவதில் பெரிய அளவில் மோசடி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

வெப்பத்தில் காட்டினால், மறையும் தன்மையுள்ள மையை கொண்டு லாரி எண், தேதி, நேரம் ஆகியவை எழுதப்படுவதாகவும், பின்னர் அவற்றை தீயில் காட்டி அழித்த பிறகு அதில் வேறொரு லாரி எண் உள்ளிட்ட தகவல்களை எழுதி முறைகேடு நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.  இந்த வகை "மேஜிக் பர்மிட்டை" பயன்படுத்தி சென்னிமலை மற்றும் பெருந்துறை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் ஒரு அனுமதி சீட்டை வைத்துக் கொண்டு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லோடு கனிமங்களை சட்டத்திற்குப் புறம்பாக லாரிகளில் கடத்தி விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே ஈங்கூர் அருகே நான்கு  லாரிகளை மடக்கி பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது  ஓட்டுனர் கொடுத்த அனுமதி சீட்டை சூடாக உள்ள புகைபோக்கியில் காண்பித்த போது, அதில் உள்ள எழுத்துக்கள் மாயமானது.  உடனடியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு லாரிகளை கொண்டு வந்த அதிகாரிகள் மேஜிக் பர்மிட் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

735 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும் கால அவகாசமா? - ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சி தேர்தலுக்கு மீண்டும், மீண்டும் கால அவகாசம் கோரும் தமிழக முதலமைச்சர் மற்றும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

0 views

நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா : தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு

நெல்லையப்பர் கோயிலில் 45 நாட்கள் நடைபெற்ற ஆனிப் பெருந்திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

8 views

திண்டுக்கல் : ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் விழா

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 12 அடி உயரமுள்ள ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி வஜ்ர அங்கி ஸேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

21 views

ரூ.18 லட்சம் கையாடல் புகார் : ஆவின் மேலாளர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல் ஆவின் பாலக மேலாளர் 18 லட்சம் ரூபாய் கையாடல் செய்தததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

21 views

ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கு - சிகிச்சை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சரவணபவன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரிய வழக்கில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

50 views

ரயில்வே மேம்பாலத்தை பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை சாந்தப்பிள்ளை ரயில்வே கேட் மேம்பாலத்தை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.