4 வது நாளாக சிகிச்சை பெற்று வரும் ராஜகோபால் : நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் இருப்பதால் மருத்துவர்கள் சிகிச்சை
பதிவு : ஜூலை 12, 2019, 02:46 PM
சாந்தகுமார் கொலை வழக்கில் கைதான ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர்ந்து 4வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாந்தகுமார் கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் கடந்த 9 ஆம் தேதி சரணடைந்தனர். தொடர்ந்து அவர்கள் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு தொடர்ந்து 4வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதால் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் உள்ளார். மேலும் அவருக்கு துறை ரீதியான மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதோடு 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  அதேநேரம், ஜனார்த்தனின் உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படலாம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தீவிர சிகிச்சை பிரிவுக்கு  வெளியே துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்...

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

949 views

பிற செய்திகள்

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

89 views

அரசு நர்சுகளுக்கு பாதுகாப்பு : செயல்முறை விளக்கம்

அரசு நர்சுகள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதால் இதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்யும் செயல் முறை விளக்கம் நிகழ்த்தி காட்டப்பட்டது.

11 views

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது - மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு

நீதிமன்ற தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியானது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

17 views

சாதனைக்கு உடல் குறைபாடு தடை இல்லை - பன்வாரிலால் புரோகித்

மாற்றுத்திறனாளிகளுக்கான 2 நாள் கருத்தரங்கத்துடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் சென்னை- தேனாம்பேட்டையில் துவங்கியது.

19 views

சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகம் - காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திய இளம் பெண்...

காதலனுடன் சேர்ந்து குழந்தையை கடத்தி விட்டு சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடிய இளம்பெண்ணை சென்னை போலீசார் 10 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

296 views

பள்ளிகளில் மாணவர் காவல் படை விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவலர் பதக்கங்கள் எண்ணிக்கை 1500ல் இருந்து 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.