ஈரோடு ரயில் நிலையத்துக்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் - ரயில்வே நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை

ஈரோடு ரயில் நிலையம் அமைய காரணமாக இருந்த பெரியாரின் பெயரை அந்த ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு ரயில் நிலையத்துக்கு பெரியார் பெயர் சூட்ட வேண்டும் - ரயில்வே நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை
x
ஈரோடு வெண்டி பாளையம் சாலையில் 1865ஆம் ஆண்டு அம்மாவட்ட ரயில் நிலையம் தொடங்கப்பட்ட நிலையில், 1905ஆம் ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தனி ரயில் பாதை அமைக்க அப்போதைய பிரிட்டிஷ் அரசால் திட்டமிடப்பட்டது. அப்போது ஈரோடு பழைய ரயில் நிலைய விரிவாக்கத்திற்கு கூடுதல் இடம் தேவைப்பட்டது. அப்போது அதற்கான 300 ஏக்கர் நிலம் பெரியாரின் முயற்சியால் வாங்கிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியதை போல பெரியார் பெயரை ஈரோடு ரயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்று அம்மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்