அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்...

ஊதிய உயர்வு, மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்...
x
சென்னை 
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு,  அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்களை முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் நடைமுறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும் என முழக்கமிட்டனர்.  
தங்களது கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், 12ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் கூறினர்.

திருச்சி

பட்ட மேற்படிப்பில் 50சதவீத இடஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

இதே போல, சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்ட அரசு மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மேலும்,15 மற்றும் 16 தேதிகளில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். 

Next Story

மேலும் செய்திகள்