நெல்லை : பிரிந்து வாழும் தம்பதி - கொடுமைபடுத்தப்பட்ட மகன் அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு

நெல்லையில் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்துவரும் தாய், மகனை சித்ரவதை செய்வதாக புகார் வந்ததால் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை : பிரிந்து வாழும் தம்பதி - கொடுமைபடுத்தப்பட்ட மகன் அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு
x
திருச்சியை சேர்ந்த மகேஷ்  - திவ்யா தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2011-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. குழந்தை தொடர்பான வழக்கில் திவ்யா ஆஜராகாததால் தந்தையிடம்  குழந்தை இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் குழந்தை தாயிடம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள பள்ளியில் படிக்கும் 5 வயது மகனுக்கு காயம் இருந்ததால் அவரிடம் ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுவனை மீட்ட குழந்தைகள் நலக்குழுவினர், நெல்லை சந்திப்பில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த மகேஷும் , திவ்யாவும் காப்பகத்திற்கு சென்றனர். பின்னர் தீவிர விசாரணை மற்றும் எச்சரிக்கைக்கு பின் தாயுடன் மகனை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ், தனது மனைவிக்கு டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஆண் நண்பர்கள் உள்ளதாகவும், அதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்