புத்தக மூட்டைகளை தூக்கிச் செல்லும் மாணவர்கள் : வீடியோ வெளியானதால் பெற்றோர் அதிருப்தி...

நெல்லை அருகே புத்தக மூட்டைகளை மாணவர்கள் தூக்கி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
புத்தக மூட்டைகளை தூக்கிச் செல்லும் மாணவர்கள் : வீடியோ வெளியானதால் பெற்றோர் அதிருப்தி...
x
நெல்லை அருகே புத்தக மூட்டைகளை மாணவர்கள் தூக்கி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. தென்காசி அருகே உள்ள கீழப்பாவூர் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள நிலையில் சுமார் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு படிக்கும் மாணவர்களை கொண்டு புத்தக மூட்டைகளை சுமந்து செல்ல ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் புத்தகங்களை தூக்கிச் செல்லும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர், கல்வியாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்