மயிலாடுதுறை : மருத்துவமனையில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகம்

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு இடையிலான பனிப்போர் காரணமாக மருத்துவமனையிலிருந்து குப்பைகள் அள்ளப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
மயிலாடுதுறை : மருத்துவமனையில் குப்பைகளை அகற்றாத நகராட்சி நிர்வாகம்
x
மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு இடையிலான பனிப்போர் காரணமாக மருத்துவமனையிலிருந்து குப்பைகள் அள்ளப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.சுமீத் என்ற தனியார் துப்புரவு நிறுவனம் கடந்த 2-ஆம் தேதி, மருத்துவமனை முன்பு குப்பைகளை கொட்டியது. இதில் மருத்துவக்கழிவுகள் இருந்தாக குற்றம்சாட்டிய நகராட்சி நிர்வாகம் தனியார் துப்புரவு நிறுவனத்துக்கு 51ஆயிரம்  ரூபாய்அபராதம் விதித்தது. அன்றிலிருந்து மருத்துவமனையில் மக்கும் குப்பைகளைக் கூட நகராட்சி நிர்வாகம் அகற்றாமல் இருந்தது. மருத்துமனை மற்றும் நகராட்சி நிர்வாகம் இடையிலான பனிப்போர் காரணமாக மருத்துவமனையில் குப்பைகள் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், கோட்டாட்சியர் கண்மணி, வட்டாட்சியர் இந்துமதி ஆகியோர் சென்று குப்பைகள் குவிந்திருப்பதை பார்வையிட்டு, உடனடியாக அவற்றை அகற்ற நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்