சோலார் மின் தகடுகளை கழுவ 3 லட்சம் லிட்டர் குடிநீர்

ராமநாதபுரம் மாவட்டமே குடிநீருக்காக அலையும் நிலையில், சோலார் மின் தகடுகளை தினசரி 3 லட்சம் லிட்டர் குடிநீரால் கழுவுப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சோலார் மின் தகடுகளை கழுவ 3 லட்சம் லிட்டர் குடிநீர்
x
கமுதி அருகே செங்கப்படையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனம் 6000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 648 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்தை கொண்டு வந்தது.  காற்று மாசு காரணமாக மின் தகடுகள் மின் உற்பத்தியை குறைக்க தொடங்கியதால் மின் தகடுகளை நல்ல தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்காக கமுதி கோட்டைமேடு பகுதியில் இருந்து தினசரி 50 முதல் 60 டிராக்டர்கள் வரை நல்ல தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. இதனை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தண்ணீர் எடுத்து செல்லகூடாது என டிராக்டர் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், மீண்டும் தண்ணீர் டிராக்டர்கள் மூலம் தண்ணிர் எடுத்து செல்லப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்துள்ள கிராமமக்கள், பெரியளவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்