சித்தூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

சித்தூர் மாவட்டம் பிளேர் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது ரவி என்பவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
சித்தூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
x
பிளேர் பகுதியைச் சேர்ந்த ரவியின் வீட்டருகே வசித்து வரும், சந்தோஷ் என்பவர் 2 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மனைவி மருத்துவமனையில் பகலில் இருந்து விட்டு, இரவு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் பகலில் தனியாக இருந்த சந்தோசின் 8 வயது மகளுக்கு ரவி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டதோடு, ரவிக்கு தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3  பெண் குழந்தைகளுக்கு தந்தையான ரவி போன்றவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்